ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது சம்பிரதாய ரீதியான அமர்வில் சமர்பிப்பார் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், பாரளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், பாராளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.
இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.