மழையுடனான காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நாளை மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேல், மத்திய, சப்ரகமுவ, தென் ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.