
பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று விடுமுறையை களிப்பதற்காக ஹந்தான மலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியில் குறித்த மாணவர்கள் குழு சிக்கிகொண்டதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தெரிவித்ததையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நாட்களில் பாடசாலை விடுமுறை என்பதால் கொழும்பு மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 16-17 வயதுடைய பாடசாலை மாணவர்கள் நேற்று காலை (04) மாலை 6.00 மணியளவில் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து ஹந்தான மலையில் ஏறியுள்ளனர்.
குளிரால் சில மாணவர்களுக்கு காலில் தசைப்பிடுப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களால் நடக்கமுடியாமல் சென்றுள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக பாதையை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்ப்பட்டுள்ளது.
பின்னர், மாணவர்கள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் மற்றும் இரண்டாம் சிங்கப் படையினர் இணைந்து இன்று (05) காலை சரசவிகம பிரதேசத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.