கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இந்த மாத இறுதியில் வழங்கப்படும் என்று கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.

பயிர் சேத மதிப்பீடுகளில் சுமார் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதெனவும் விவசாயிகள் அபிவிருத்தி மத்திய நிலையங்களினால் பரிந்துரைக்கப்பட்ட இறுதி இழப்பீட்டு ஆவணங்கள் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென்றும் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *