
கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இன்று (22) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.