
நான்கு வயது ஆண் குழந்தையுடன் தாயொருவர் நேற்று (16) மாலை தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை செய்யும் நோக்கில் குதித்துள்ள நிலையில் குழந்தை காணாமல் போயுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும், தாய் உயிருடன் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தாய் 4 வயது ஆண் குழந்தையுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதிப்பதை கண்ட இளைஞர் ஒருவர் உடனடியாக நீர்த்தேக்கத்தில் பாய்ந்து நீரில் குதித்த தாயை காப்பாற்றியதாகவும், ஆனால் அந்த இளைஞனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் தலவாக்கலை தெவிசிறிபுற பகுதியை சேர்ந்தவரெனவும் குடும்பத் தகராறு காரணமாக தானும் தனது குழந்தையும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நீர்தேக்கத்தில் காணாமல் போன குழந்தையைக் தேடும் நடவடிக்கையில் தலவாக்கலை ஈடுபட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.