
கஜ்ஜா என்று அழைக்கப்படும் அனுர விதான கமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் படுகொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் இன்று காலை (25) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையிலிருந்து நாட்டிற்கு திரும்பிய போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அனுர விதான கமகே மற்றும் அவரது 2 பிள்ளைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது