2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சசைகளை 2026ஆம் ஆண்டு முதல் வழமையான நேர அட்டவணைக்கு அமைய நடத்துவதற்கு திட்டமித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளியாகியுள்ள சாதாரண தர முடிவுகளை மீளாய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், நாளை முதல் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை இணையவழி மூலமாக விண்ணப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.