முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 16 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
றாகம பொலிஸார் நேற்று மாலை முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நுகவெல கெசல்வத்தையில் உள்ள கேரேஜ் ஒன்றில் இரகசியமாக ஒன்று கூடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட 16 மாணவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளனர்.
கொட்டாஞ்சேனை, புளூமெண்டல், தெமட்டகொட, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பிரதேசங்களில் உள்ள பிரபல பாடசாலைகளில் பயின்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாணவர்கள் சில காலமாக போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் றாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.