
ஆபிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்காவின் மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் சரிந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்
. இதேவேளை குறித்த சுரங்கத்தில்1800 பேர் இருந்த நிலையிலேயே இச் சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்ததாக கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.