
வருடம் ஆரம்பித்து இதுவரை நடந்த 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி, 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜனவரி 1 ஆம் திகதி முதல், 5 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 6 கைத்துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடுகளில் பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள், 2 வேன்கள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.