
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாளை (27) வியாழக்கிழமை மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
மஹாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமொன்றை வழங்குதல் தொடர்பான அறிவித்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக எதிர்வரும் 01 ஆம் திகதி (சனிக்கிழமை ) மேற்குறித்த தமிழ் பாடசாலைகளின் பாடசாலை தினமாக நடாத்துவதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் மாகாண கல்விப்பணிப்பாளர் நிஹால் அலஹகோன் சகல அதிபர்களையும் கேட்டுள்ளார்