
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை சனிக்கிழமை (01) பிற்பகல் 12.30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, கந்தகெட்டிய, ஊவா பரனகம, மீகஹகிவுல, சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.