வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியான மொரேனா கட்சி சார்பாக கிளாடியா ஷீன்பாம் 60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தேர்தல் நடைபெற்று மூன்று மாதங்களின் பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக் கொண்டார்.
புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளரான இவர், 2007ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.2018ஆம் ஆண்டில் தேர்தலில் வெற்றியீட்டி மெக்சிகோவின் முதல் பெண் மேயராக இருந்தார்.