
தென் கொரியாவின் தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமை “முன்னெப்போதும் இல்லாத வகையில்” தொடர்ந்து மோசமாக உள்ளது என தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார்.
தீ அதிகம் பரவி வருவதால் 23,000க்கும் மேற்பட்டோர் அப்பகுதில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இக்காட்டுத்தீயினால் 1,300 ஆண்டுகள் பழமையான புத்த கோவில் தீக்கிரையாகியுள்ளது.
தீயணைப்பு வீரர்களும், இராணுவ வீரர்களும் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றதுடன் தென் கொரியாவை தளமாகக் கொண்ட அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன