சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும் மனிதர்களின் இரத்தத்தை- இந்த இரத்தத்தை உண்ணும் பூச்சிகளுக்கு நச்சுத்தன்மையாக்குவதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து பொதுவாக அரிதான பரம்பரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்து 4-ஹைட்ராக்ஸி-ஃபெனைல்பைருவேட் டைஆக்ஸிஜனேஸ் (HPPD) எனப்படும் ஒரு வகை என்சைமை (Enzyme) தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

இது பூச்சி இரத்தத்தை ஜீரணிப்பதைத் தடுக்கிறது, இதனால் அவை விரைவாக இறக்கின்றன.

நுளம்புகளைக் கொல்ல மருந்தின் எந்த செறிவுகள் தேவை என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, அதன் செயல்திறனை ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டினுடன் ஒப்பிட்டுள்ளனர்.

மனித இரத்த ஓட்டத்தில் ஐவர்மெக்டினை விட நிடிசினோன் நீண்ட காலம் நீடிக்கும் என்றும், மலேரியாவை பரப்பும் வயதானவை உட்பட அனைத்து வயது நுளம்புகளையும் மட்டுமல்ல, பாரம்பரிய பூச்சி கொல்லிகளை எதிர்க்கும் உறுதியான நுளம்புகளையும் கொல்ல முடிந்தது என்றும் காட்டப்பட்டுள்ளது.

மருந்து ஊட்டப்பட்ட நுளம்புகள் முதலில் பறக்கும் திறனை இழந்து, பின்னர் விரைவாக முழு முடக்கம் மற்றும் மரணம் அடைந்தன என்று ஆய்வு ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.

இருப்பினும், மருந்தின் எந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதைத் தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *