
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் .
இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் இவ்வாறு மரணித்தவர் நாச்சிலந் தெனிய பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஹேமாவதி என்பவரெனவும், சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்த வேலையில் ஊசி மலைக்கும் சிவப்பு அம்பலம் பகுதிக்கும் இடையில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.