
2026ஆம் ஆண்டு பல புதிய கல்வி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இன்று (20.04) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டில் பல புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை மற்றும் அரசாங்கக் கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து பிரதமர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.