ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதையும் கல்வி அமைச்சு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்

https://chat.whatsapp.com/H1KR0kjvdpNBkQYz4vXbAo

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *