உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒருவாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகள் எவையும் முழுமையற்றவையல்ல எந்த அறிக்கையும் காணாமல்போகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைனகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டபடி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் பகிரங்கப்படுத்தப்படாத வெளியிடப்படாத பகுதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார் என்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகளும் கத்தோலிக்க திருச்சபையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள உதயகம்மன்பில முன்னாள் ஜனாதிபதி கத்தோலிக்க திருச்சபை இந்த அறிக்கையை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எம் இமாம் ஏ.என்.ஜே. அல்விஸ் ஆகியோர் தலைமையிலான இரண்டு குழுக்களின் வெளியிடப்படாத அறிக்கைகளையே கத்தோலிக்க திருச்சபை தற்போது குறிப்பிடுகின்றது என தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் இந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.