ஓய்வூதியர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் உர மானியத்தை அதிகரித்து வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 3,000 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கும், 2024/2025 பெரும் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விலசாயிகளுக்கு ஒரு ஹெட்டேயருக்கு தலா 25,000 ரூபா என்ற வகையில் ஆகக்கூடியது 2 ஹெக்டேயருக்கு உர மானியத்தை அதிகரித்து வழங்குவதற்கும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்குவதற்கும் அமைச்சரவைத் தீர்மானத்துள்ளது.

குறித்த தீர்மானம் அமுல்படுத்துவதற்குத் தேவையான நிதியை தேசிய வரவுசெலவுத் திட்ட திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்வதற்கு நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *