முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன.எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம்.

என தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-உகாண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டி பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகாண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன்.

நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன்.நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.

எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர்.ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும்,தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமாரதிசநாயக்கவினால் அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

எங்களுடைய முழுமையான திட்டத்தில் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான அமைப்பொன்றை ஏற்படுத்த உறுதியளித்திருந்தோம்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அவ்வாறான அமைப்புகள் உள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்து அதனை வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அதனை மீட்பதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

என்னுடைய அந்த உரையின் போது உகாண்டாவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்கவேண்டியதன் அவசியம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன்.

நான் அந்த உரையை ஆற்றியவேளை பணம் அச்சிடும் டி லாரூ நிறுவனம் இலங்கையில் அச்சடித்த பணத்தின் ஒரு பகுதியை உகாண்டாவிற்கு அனுப்பியது என்பதை நான் அறிந்திருந்தேன், என்னுடைய கருத்து பேசுபொருளாக மாறியது.

.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *