குடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த போத்தல்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் தண்ணீரில் கசியும் என்று உணவு பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

இவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்றும் இது குறிப்பிடத்தக்க உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஆராய்ச்சிகளில் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்கள்ளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

குடிநீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள், பெரிய பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உலர் வலயப் பகுதிகளில் நீர் சேமிப்புக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் 19 லிட்டர் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

இந்த போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவு வலியுறுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *