பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்காக வேட்பாளர் ஒருவர், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் செலவுசெய்ய வேண்டிய தொகை தேர்தல் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே வாக்காளர் ஒருவருக்கு அதிகபட்ச பணத்தை செலவு செய்யக்கூடியதாக இருக்குமென்றும், கொழும்பு மாவட்டத்தில் வாக்காளர் ஒருவருக்கு 114 ரூபா செலவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான செலவு குறித்த வர்த்தமானி தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், குறைந்த அளவு நிதி செலவு செய்யக்கூடிய மாவட்டமாக வன்னி இருப்பதுடன், அந்த மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவருக்கு 82 ரூபா செலவிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.