தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேஷபந்து தென்னகோனின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மனு பிரேரணை மூலம் அழைக்கப்பட்டபோது, ​​மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிப்பிட அனுமதி கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த மனுக்கள் இன்று (29) பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *