தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, தீழ் கண்டவாறு தெரிவித்தார்” புகையிரத நிலைய அதிபர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தீர்ப்பதற்கு புதிய அரசாங்கத்தின் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை கால அவகாசம் தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பரபரப்பான நேரத்தில் அவர் இதில் அவதானம் செலுத்துவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

புகையிரத பொது முகாமையாளர் குழுவொன்றை நியமிக்க தயாராகி வருகிறார்.குழுவை நியமிப்பது நல்லது. பிரச்சினைகளைத் தவிர்க்கும் குழுக்களில் எங்களுக்குப் பங்கு இல்லை.

எதிர்வரும் திங்கட்கிழமை நிரந்தர தீர்வொன்றை புகையிரத பொது முகாமையாளரின் ஊடாக அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட வேண்டும்.

இல்லையேல், செவ்வாய்க்கிழமை தொடக்கம் அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *