முப்படையினர் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கு நாளை 4ஆம் திகதி திங்கட்கிழமை சந்தர்ப்பம் வழங்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி காலை முதல் அரச நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பமானதுடன் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது வாக்குகளை தபால் மூலம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள் நவம்பர் 07, 08 ஆம் திகதிகளில் தங்கள் வாக்குகளை அளிக்க முடியும்.
இந்நிலையில் 21,160 தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டத்துடன் , ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தபால் மூல வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.