அறுகம்பை சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை தொடர்பில் இதுவரையில் மாலைதீவு பிரஜை ஒருவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அறுகம்பை பகுதியில் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள முக்கிய நிதித் தளங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்பது குறித்து முடிவுக்கு வர முடியவில்லை.

எனவே, தேவையற்ற தவறான விளக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *