தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி ஒன்றின் சுவரொட்டிகளை சட்டவிரோதமான முறையில் ஒட்டிய இருவர் இன்று (14) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி கந்தவத்தை பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிய வேளையில் கந்தவத்தை பிரதேசத்தை சேர்ந்த 66 வயது மற்றும் 55 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.