
சாரதி அனுமதிப்பத்திரம் செய்து தருவதாக கூறி செவித்திறன் குறைபாடுள்ள நபர் உட்பட பலரை ஏமாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கான்ஸ்டபிள் கைதுசெய்யும்போது, நபர் ஒருவருக்கு வழங்கிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பறித்து வாயில் போட்டு அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.