
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய சுற்றிவளைப்புகளுக்கு மேலதிகமாக, இதற்காக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிவரை இந்தச் சோதனைகள் தொடரும் எனவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் காட்சிப்படுத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதவிர, காலாவதியான மற்றும் பழுதடைந்த பொருட்கள் சந்தைக்கு வராமல் தடுக்க, மொத்த விற்பனை கடைகள், களஞசியசாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.