
காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.