
விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியா வணக்கஸ்த்தலத்தில் தங்கியிருந்த 8 இந்தோனேசிய பிரஜைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வணக்கஸ்த்தலத்திற்கு சென்று சோதனையிட்டதில் 8 இந்தோனேசிய பிரஜைகளை கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் போது தங்களிடம் கடவுச்சீட்டு அல்லது விசாக்கள் இல்லை எனவும், விசாக்கள் காலாவதியாகிவிட்டதால், புதுப்பிப்பதற்காக அனைத்து ஆவணங்களையும் இலங்கையில் உள்ள தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் கூறியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் நுவரெலியாவிற்கு வருவதற்கு முன்னர் ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டிக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.