
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்க அமைச்சரவை நேற்று தீர்மானித்தது.
இதன்படி, 400,000 பேருக்கான அசஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், இந்த திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று ஜயதிஸ்ஸ கூறினார்.
அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“பொருளாதார சிக்கலில் இருக்கும் 400,000 பேருக்கு மேலும் ஒரு வருடத்திற்கு நலன்புரி உதவி வழங்கபடுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்..