இலங்கையில் காட்டுப்பன்றிகள், மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் கருத்துகளை பெறும் திட்டத்தை விவசாய அமைச்சு தொடங்கியுள்ளது.

விவசாய அமைச்சின் கூற்றுப்படி, இந்த வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க வன விலங்குகளை விரட்டும் முறைகளாக காற்று துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களும் செயல்படுத்தியுள்ளன.

ஆனால் இத் திட்டம் பயிர் சேதங்களை குறைக்காத காரணத்தினால் அந்த முறைகளைத் தவிர, வேறு ஏதேனும் முறைகள் அல்லது யோசனைகள் இருந்தால், அவற்றை குறுகிய திட்ட முன்மொழிவுகளாக தயாரித்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு, அறிஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட இலங்கையின் அனைத்து குடிமக்களையும் விவசாய அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.

அல்லது இந்த டிசம்பர் 28க்கு முன் 0770440590 என்ற வட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *