
புது வருடம் ஆரம்பித்த 14 நாட்களில் 2352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல்மாகாணத்தில் 1,057 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 301 நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 229 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 204 நோயாளர்களும் பதிவாகியுள்ளது.
அதிலும் மேல்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும். அந்தக் காலகட்டத்தில் டெங்கு இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு நாட்டில் 49,887 டெங்கு நோயாளர்களும் 24 டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளன.