
மன்னார் தோட்டக்காடு பகுதியில் நேற்று (20) கடும் மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக உறவினர் வீட்டுக்குச் சென்ற யுவதி ஒருவர் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ். பிரஷாந்தி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது பெற்றோர் வீட்டில் இல்லாததால் மழையில் இருந்து பாதுகாத்து கொள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கனமழை காரணமாக, ரயில் வரும் சத்தம் கேட்காததால், அதில் குறித்த யுவதி அடிபட்டதாக நம்பப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.