
அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா நேற்று (29) சிறப்பு பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணைியில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர், ஊடகங்களுக்குப் கருத்து தெரிவித்த அர்ச்சுனா எம்.பி., தான் ஒரு வைத்தியர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முறை மக்களுக்காக பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. 38 வருடங்களாக நான் ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் மக்களுக்காகவே இங்கு வந்துள்ளேன்.
அதனால் இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை என்று தெரிவித்துள்ளார்.