
களுத்துறை நீர் விநியோக பிரிவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளுக்கு இன்று அதிகாலை 4.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை 28 மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதனால் நீர் விநியோகம் வழமைக்கு திரும்புவரை, கிடைக்கக்கூடிய தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.