எரிபொருள் விலையை குறைத்ததால் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை 4.24% குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 27 ரூபாவாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.