
நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கை குறித்து நேற்றையதினம்(22) நடைபெற்ற சிறப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரியவும்(Harini Amarasuriya) கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைமை அமைப்பாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அவைத் தலைவர், உரிய பரிசீலனைக்குப் பிறகு இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.