
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இசாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று (26) கொழும்பு குற்றப்பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் துப்பாக்கிதாரிக்கு உதவியாக இருந்த பிரதான சந்தேகநபரான இசாரா செவ்வந்தியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.