நாடளாவிய ரீதியில் இன்று (27) இடம்பெறும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் மதிய நேர உணவு இடைவேளையின் போது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும்,கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

குறித்த போராட்டத்தின் போது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றிவைத்தியசாலையின் சிகிச்சை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் செயற்பாட்டினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார பொருட்களின் தட்டுப்பாடுகளால் சுகாதாரத் துறையினை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை எனவும் இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களிற்கு வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

மேலும், வேறு அரச ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் எங்களுக்கும் வழங்க அரசு முன்வர வேண்டும் கொடுப்பனவுகள் அதிகரிக்கும் போது பாரபட்சம் இன்றி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *