
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஜபோஸ்லேன் பகுதியில் நேற்று முன்தினம் (15) இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை கைதுசெய்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை நேற்று முன்தினம் அதிகாலையில் இடம்பெற்றிருந்த நிலையில், கிராண்ட்பாஸ் பொலிஸார் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (16) இரவு வெல்லம்பிட்டி பகுதியில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவை குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.