
மரம் மற்றும் பாறை சரிந்துள்ளதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இங்குருஓயா மற்றும் கலபொட இடையே ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎல மற்றும் பதுளை இடையே பாறை சரிந்ததாலும் மலையக ரயில்கள் தாமதமாகி உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.