
எரிபொருள் தட்டுப்பாடு போன்ற மாயையை உருவாக்கி மக்களை பத்தற்றமடைய செய்ய அரசியல் அல்லது ஏதோ ஒரு தரப்பு முரசிகளை எடுப்பதாக தெரிகிறது.
அப்படி செய்யக் கூடாது நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை.எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம்..
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையாக நிற்பது தொடர்பில் பாராளுமன்றில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
இதன்போது பாராளுமன்றில் சர்ச்சை ஏற்பட்டது. இதன்போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இங்கு கருத்து வெளியிட்ட டி.வி.சாணக்க எம்.பி , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஞாயிறு தினத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெறாதென்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா என்று கேள்வியெழுப்பினார்.