நிலுவையில் இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மே முதல் வாரத்தில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பூர்வாங்கமாகத் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் விவரங்கள் (மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் பற்றிய விவரங்கள்) இரண்டொரு நாள்களில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முதலில் வெளியிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

வேட்புமனுக்கள் ஏற்பதற்கான தினங்கள்அதன் பின்னர் சில நாள்கள் கழித்து தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

அந்த உத்தியோகபூர்வ அறிவித்தலில், அது வெளியான நாளிலிருந்து 14 நாள்கள் கழித்து 18 ஆவது நாள் வரை மூன்றரை நாள்கள் வேட்புமனுக்கள் ஏற்பதற்கான தினங்களாக அறிவிக்கப்படும் எனத் தெரிகின்றது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தப் பணி பூர்த்தி அடைந்ததும், ஐந்து முதல் ஏழு வார காலம் தேர்தல் பிரசாரத்துக்கு இடம் அளித்து அதற்கேற்ற வகையில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்த வாரத்தில் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கை என்ன திகதியில் வெளியாகின்றதோ அதிலிருந்து ஏறத்தாழ சரியாக இரண்டு மாதங்கள் கழித்து மே முதல் வாரத்தில் – பெரும்பாலும் அதே திகதியில் – தேர்தல் நடத்தக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தேர்தல் தொடர்பான முதல் உத்தியோகபூர்வ அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்பது தொர்பான திகதிகள் மற்றும் நேரங்கள், இடங்கள் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது பூர்த்தியானதும் தேர்தல் அடுத்த ஐந்து முதல் ஏழு வாரத்துக்குள் இடம்பெறக்கூடியதாக தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *