
பொலனறுவை பாடசாலையில் 11 ஆம் வகுப்பு மாணவரொருவர் தாக்கப்பட்டு காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலுக்குள்ளான மாணவர் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முதலாம் திகதி பாடசாலை நேரத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக மெதிரிகிரிய பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.