
அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி, எரிபொருள் ஆடர்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பாக தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.