
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஒரு விழாவின் இறுதியில் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை வரலாற்றில் பொலிஸ் தரப்புக்கு பயந்து ஒரு பொலிஸ் மா அதிபர் மறைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்றும், மறைந்திருக்கும் தேசபந்து தென்னகோனை அவர் கைது செய்வார் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.